Home தென்னிலங்கைச் செய்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் உறுதி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் உறுதி!

Share
Share

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாதத்  தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

அந்தவகையில் செப்டெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றைப்  பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.

அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...