Home தென்னிலங்கைச் செய்திகள் நாடு திரும்பியதும் தமிழசுக் கட்சியை சந்திப்பார் அநுர – அமைச்சர் சந்திரசேகரர் தகவல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

நாடு திரும்பியதும் தமிழசுக் கட்சியை சந்திப்பார் அநுர – அமைச்சர் சந்திரசேகரர் தகவல்!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்.” – இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் யார் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றார்கள் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சுய அரசியல் நலன்களுக்காகவே பலரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால், அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுகினறது. இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடுவார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார். எனினும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான ஈடுபாடுக்கும் சுய அரசியல் நலன்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அனைவரும் உணர வேண்டும். எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், ஜனாதிபதியுடன் தமது கட்சி கடைசியாக நடத்திய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருடம் கடந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.” – என்றார்.  

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...