Home தாயகச் செய்திகள் நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்பு!

Share
Share

தமிழர்களின் பாரம்பரிய சொத்தான யாழ். நல்லூரில் அமைந்துள்ள  மந்திரிமனையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க விரும்புகின்ற நலன் விரும்பிகள் இணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை மந்திரிமனைக்கு முன்னால் நடத்தினார்கள்.

இதில் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும், தமிழர்களின் சின்னங்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அத்துடன் மந்திரிமனை அமைந்துள்ள அந்த நிலத்தைக் காணி உரிமையாளர் நல்ல நோக்கம் கருதிக் கையளிக்க வேண்டும் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.  

தொடர்ந்தும் அசமந்தப்போக்குகள் தொடருமானால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தாங்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...