Home தென்னிலங்கைச் செய்திகள் தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை!

Share
Share

தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்தமையால் மருத்துவமனைக் கட்டமைப்பில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இரு முறை சிந்திக்க வேண்டியுள்ளது. தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது- இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் நேற்று முன்தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மருந்துகளின் தரம் தொடர்பான கருத்துகளை அரச தரப்பு தவிர்த்து வருகிறது. பொறுப்புக் கூறலிலிருந்தும் விலகியுள்ளது. நாட்டிலிருந்து பெருமளவான மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையில் மருத்துவமனைகளிலும் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளபோதும் மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்குவதிலும் காலதாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மருத்துவர் பற்றாக்குறை உள்ள போதும் சகல மருத்துவமனைகளிலும் நோயாளிகளைக் கருத்தில் கொண்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ள ‘இலங்கை விசேட மருத்துவ சேவை’ என்ற புதிய கட்டமைப்பை உருவாக்குமாறு நாம் முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் வசதிகள் குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

எனினும், செயல்பாட்டு ரீதியான எந்த முன்னேற்றங்களையும் நாம் காணவில்லை.- என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...