அம்பாந்தோட்டை, தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பளித்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்று மதியம் மஹிந்த வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment