Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!

Share
Share

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கைப் பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்குத் தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...