Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ஒன்றுபட்டுள்ளன எதிரணிகள் – மொட்டுக் கட்சி கூறுகின்றது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ஒன்றுபட்டுள்ளன எதிரணிகள் – மொட்டுக் கட்சி கூறுகின்றது!

Share
Share

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையிலேயே எமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்றது. கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்றிருந்தேன்.
எமது கட்சிக்குரிய தனித்துவங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாத்தபடியே நாம் பயணிக்கின்றோம்.

எனினும்,  நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களை ஒடுக்கி,  வடகொரியா போன்று ஜனநாயகம் அற்ற சூழ்நிலையை  இங்கு ஏற்படுத்துவதற்கு பாரிய முயற்சி இடம்பெறுகின்றது.

இதற்கு ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைவிரித்தாடுகின்றது. தமது கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களைப் பொலிஸுக்கு நியமித்து, தமது தேவைக்கேற்ப பொலிஸாரை பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். எனவேதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...