Home தென்னிலங்கைச் செய்திகள் செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

Share
Share

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன் படகு ஊடாக இந்தியாவிற்கு சென்று பின்னர் அங்கிருந்து ரயில் ஊடாக நேபாளத்திற்கு தப்பிச் சென்று போலி அடையாளத்துடன் சொகுசு வாடகை வீடொன்றில் தலைமறைவாகி இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய , குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், விசேட பொலிஸ் குழு ஒன்று நேபாளத்திற்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாக உள்ள இடம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஏனைய சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...