Home தாயகச் செய்திகள் சுண்டிக்குளத்தில் படகு மோதி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுண்டிக்குளத்தில் படகு மோதி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சிக் கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்று அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றது.

அண்மைய நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை சுண்டிக்குளம் கடல் பகுதியிலும் நிலவியது.

இதன்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு அந்த இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரியவந்துள்ளது.

சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை...