Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் ரணிலுக்காக இன்று திரண்ட ஆதரவாளர்கள் ‘அநுர கோ ஹோம்’ எனக் கோஷம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் ரணிலுக்காக இன்று திரண்ட ஆதரவாளர்கள் ‘அநுர கோ ஹோம்’ எனக் கோஷம்!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி எதிர்க்கட்சியினர் மற்றும் ரணிலின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அநுர கோ ஹோம்” என்று விண்ணதிரக் கூச்சலிட்டனர்.

இதனால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பு கோட்டை முதல் லேக் ஹவுஸ் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கொம்பனி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...