Home தென்னிலங்கைச் செய்திகள் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷ கைது!

Share
Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான செவனகல பகுதியில் உள்ள கட்டடமொன்று சேதமாக்கப்பட்டமைக்கு, இழப்பீட்டை பெறும் செயற்பாட்டின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தநிலையில், இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...