Home தென்னிலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராகவும் பிரேரணை கொண்டு வருவோம் – நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகவும் பிரேரணை கொண்டு வருவோம் – நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

Share
Share

“நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை நேற்று புதன்கிழமை சபையில் தெளிவுபடுத்திய பின்னரே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத்தில் 1978 இல் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் உப ஜனாதிபதிக்கு எதிராகக் கூட இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தில் எதிரணிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நேரிடும்.

ஆகவே, தனது முடிவை சபாநாயகர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...