Home தென்னிலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!

Share
Share

“சபாநாயகர் மீதான நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது. எனவே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்.”- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை பதவி விலகுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது அவரே கிழக்கு மாகாணக் கட்டளைத்  தளபதியாக இருந்தார். எனினும், அவர் பதவி விலகவில்லை. அரசும் அவரைப் பதவி நீக்கவில்லை. அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரேரணையையைச் சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையை சபையில் முன்வைக்குமாறு நாம் சபாநாயகரிடம் வலியுறுத்தினோம்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியும் எனச்  சட்டமா அதிபர் கூறினார் என எமக்குத் தகவல் கிடைத்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஆவணத்தைக் கோரினோம். எனினும், அது வழங்கப்படவில்லை.

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். எனினும், சபாநாயகர் அரசியல் முடிவொன்றை எடுத்து அதனை நிராகரித்துள்ளார். இது அரசைப் பாதுகாக்கும் செயலாகும். இந்த விடயத்தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச்  செயற்பட்டுள்ளார்.

அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அப்படி இருந்தும் எதற்காக விவாதத்தக்கு அஞ்ச வேண்டும்? இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் ஆளுங்கட்சியில் உள்ள சிலருக்குக் கடந்த அரசுகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகும். இதனால்தான் ஆளுங்கட்சி அஞ்சுகின்றது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...