Home தாயகச் செய்திகள் சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

Share
Share

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

குறித்த பெண் ஒரு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சுமார் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. எனினும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்க உத்தரவிட்டார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...