Home தென்னிலங்கைச் செய்திகள் கைது பயத்தைக் காட்டிஎம்மை ஒடுக்க முடியாது – நாமல் எம்.பி. சூளுரை!
தென்னிலங்கைச் செய்திகள்

கைது பயத்தைக் காட்டிஎம்மை ஒடுக்க முடியாது – நாமல் எம்.பி. சூளுரை!

Share
Share

“கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசு முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டின் சுயாதீன நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, எமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்கொள்வோம். குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நிரூபிப்போம்.

அச்சுறுத்தல் மூலம் எதிரணிகளை மௌனிக்க வைக்கலாம் என அரசு நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. அரசு தவறிழைத்தால் அதனைத் தொடர்ந்து துணிவுடன் சுட்டிக்காட்டுவோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...