Home தாயகச் செய்திகள் கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

Share
Share

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடுகின்றனர் என்று மூதூர் பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்ததை அடுத்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் குழுவினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 4 கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மேற்படி சந்தேகநபர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...