Home தாயகச் செய்திகள் குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!

Share
Share

யாழ்.பருத்தித்துறையில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல்போனவர் தொடர்புடைய ஒரு விடயத்தை விசாரிக்க தங்கள் அதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நபர்கள் நால்வர், அவர்களைப் பின் தொடர்ந்ததாகவும் அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில்
அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை செய்த
போது குற்றப் புலனாய்வுப்பிரிவினரை பின் தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர்உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை
அதிகாரிகளிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...