Home தாயகச் செய்திகள் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

Share
Share

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பமாகியது.

இதன்போது கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகக் கோஷங்களை எழுப்பியவாறு சென்றிருந்தனர்.

அங்கும் மக்கள் ஒன்று கூடித் தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டமிட்டநில அபகரிப்பு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், மு.சந்திரகுமார், சாந்தி சிறிஸ்கந்தராஜா, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...