Home தென்னிலங்கைச் செய்திகள் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? – உண்மையைக் கண்டறிவதில் அரசு அக்கறை என்று புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? – உண்மையைக் கண்டறிவதில் அரசு அக்கறை என்று புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Share
Share

“வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று முற்பகல் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை வழங்குவதன் மூலம் இந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவேன்.

தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...