Home தென்னிலங்கைச் செய்திகள் கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!

Share
Share

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பான முறைப்பாட்டைத்  தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில், உதய கம்மன்பில சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கக்கூடிய கருத்துக்களைத் தெரிவித்தார் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

இந்தநிலையில் அந்தக் கருத்துக்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ், குற்றமாகுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...