இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனையின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் இந்த வரைவு பிரேரணை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 செப்டெம்பரில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை தொடர்பான நாடுகளான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளன.
இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது.
Leave a comment