Home தாயகச் செய்திகள் ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நா. கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!

Share
Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் புதிதாக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் சபையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் சபையில் உரையாற்றவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...