Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.தே.கவின் 79 ஆவது நிறைவு விழா!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐ.தே.கவின் 79 ஆவது நிறைவு விழா!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்குக் கட்சியின் முகாமைத்துவக்  குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவக் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...