Home தென்னிலங்கைச் செய்திகள் ஐஸ் போதைப் பொருளுடன் வன்னியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் வன்னியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

Share
Share

முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது, குறித்த காவல்துறை அதிகாரி தனது உடைமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய குறித்த காவல்துறை அதிகாரி, கையூட்டல் பெறல் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில்,வெலிஓயா காவல்துறை நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் .

இந்தநிலையிலேயே அவர் இன்று ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...