Home தென்னிலங்கைச் செய்திகள் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது – இந்தியாவில் இலங்கைப் பிரதமர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது – இந்தியாவில் இலங்கைப் பிரதமர்!

Share
Share

இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்துரைத்துள்ளார். 

 இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா அளித்த நிதியுதவி தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி, டெல்லியுள்ள இந்துக்கல்லூரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டார். 

இதன்போது, குறித்த கல்லூரியில் தாம் கல்வி கற்ற காலத்தை நினைவூட்டிய பிரதமர், தம்மை மீண்டும் அங்கு வரவழைத்தமை தொடர்பில் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு வழங்கி வரும் கல்விக்கான ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...