Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

Share
Share

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு பொறிமுறையை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிகவும் அவசரமான தேவைகளைக் கண்டறிவதற்காக, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து பல்துறைத் தேவைகள் மதிப்பீட்டை மேற்கொள்ள ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளதுடன், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், நீர், கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் ஆரம்பகால மீட்சி போன்ற துறைகளில் உள்ள தேவைகளைக் ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.

தேசிய மீட்பு மற்றும் ஆரம்பகால மீட்சி முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்கள் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரஞ்சே உறுதிப்படுத்தினார்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவதில் சவால்கள் இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்புச் சேதம் காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தபதுளை மாவட்டத்தின் 25 பாதுகாப்பு மையங்களுக்கு குடிதண்ணீரை விநியோகம் செய்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முப்படைகளுடன் இணைந்து செயல்பட அவசரக் குழுக்களை அனுப்பியுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...