Home தென்னிலங்கைச் செய்திகள் இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!

Share
Share

“போர்க் காலத்தில் பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திரச் சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது :-

“போர்க் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பல இராஜதந்திரப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். அப்படியான பிரச்சினைகள் தற்போது வருமானால் இந்த அரசு நடுங்கிவிடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த எடுத்த முடிவால் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஓரணியில் திரண்டன. இந்நிலையில் அவற்றைக் கையாள்வதற்கு மஹிந்த கையாண்ட இராஜதந்திர, அரசியல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்தான் மஹிந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனவே, நேரம் கிடைக்கும் பட்சத்தில், மஹிந்தவைச் சந்தித்து இராஜதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்குக் கூறுகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...