Home தாயகச் செய்திகள் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாயாரும் மரணம்! யாழில் துயரம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாயாரும் மரணம்! யாழில் துயரம்!

Share
Share

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயாரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பிரசவித்தார்.

இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். மரணத்திற்க்கான காரணம் தெரிய வராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...