Home தென்னிலங்கைச் செய்திகள் அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு – ஐ.நா செயலர் வாக்குறுதி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு – ஐ.நா செயலர் வாக்குறுதி!

Share
Share

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(25) நடைபெற்றுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயல்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கினார். 

இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயல்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...