Home தாயகச் செய்திகள் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Share
Share

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரச அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, அஷ்ரப் தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாசித், முத்து ரத்தத்த, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய வேலைத்திட்டங்களான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், கிராமிய வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்ட செயலகம் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் வேறு ஸ்தாபனங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி, வீதி அபிவிருத்தி, திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம், விளையாட்டு போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாகக்  கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இந்த விடயங்களில் அதீக அக்கறையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரினால்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

அத்தோடு, தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராய இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை அவ்வாறான கூட்டங்களில் எடுக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டனர்.

கொழும்பு – அம்பாறை இடையில் உள்ளக வான் போக்குவரத்துச் சேவை ஒன்றை ஆரம்பித்தல், நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்குக்   கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கல்முனை பிரதேசத்தில் ரயில் டிக்கெட் வசதிகளை நிறுவுதல், மாவட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களில் யானை வேலிகளை விரைவாக அமைத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...