Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இது வரவு – செலவுத் திட்ட உரையாகும்.

அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் தொடர்பான (2 ஆம் வாசிப்பு மீதான) விவாதம் நடைபெறும். 2 ஆம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் 3 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும்.

இது அமைச்சுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிக்கும்.

டிசம்பர் நடுப் பகுதியில் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

வரவு- செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சபையில் முன்வைக்கப்படும். இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.

இது தேசிய மக்கள் சக்தி அரசின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...