Home தென்னிலங்கைச் செய்திகள் அத்துரலிய ரத்தன தேரர் பிணையில் விடுவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அத்துரலிய ரத்தன தேரர் பிணையில் விடுவிப்பு!

Share
Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைப்  பிணையில் விடுவிக்குமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துரலிய ரத்தன தேரர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்துரலிய ரத்தன தேரரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் வேதனிகம விலமதிஸ்ஸ தேரரைக் கடத்திச் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அத்துரலிய ரத்தன தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்  நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆஜராகியதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...