Home தாயகச் செய்திகள் பிரிட்டன் துணைப்பிரதமரை தமிழ்த் தரப்புக்கள் சந்திக்கின்றன!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிரிட்டன் துணைப்பிரதமரை தமிழ்த் தரப்புக்கள் சந்திக்கின்றன!

Share
Share

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இராஜதந்திரப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும்

நோக்கில் இந்தப் பயணம் அமையவுள்ளது.

இந்தப் பயணத்தில் பிரிட்டன் துணைப்பிரதமர் டேவிட் லம்மி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணிஅமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்புகளில், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அபிவிருத்தி ஆதரவு, கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு உட்படப் பல துறைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

டேவிட் லம்மி இன்று காலை இலங்கை வந்தடைந்து, திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் இன்று மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.

இந்தக் குறுகிய பயணத்தின்போது அவர் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இன்று

பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

பிரிட்டன் துணைப் பிரதமருடனான சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் பிரதான அம்சமாக ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் தொடர்பான உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.

இந்த சாசனம், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்துவதையும், குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு முறைகளை ஊக்குவிப்பதையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கமான

சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டேவிட் லம்மியின் வருகை, புதிய இலங்கை அரசுடன் பிரிட்டன் இணைந்து செயற்படுவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பைத் தயாரிப்பதாக யாழில் தமிழ்ப் பிரதிநிதிகள் நேற்றுக் கூடித் தீர்மானம்!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட் பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன்...

அல்லைப்பிட்டிக் கொலை; சிறுவனின் உறவினர்கள் சடலத்துடன் வீதியில் போராட்டம்!

யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப்...

குமாரபுரம் படுகொலை; நினைவேந்தல்!

திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது. திருகோணமலை – மூதூர் –...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...