Home தாயகச் செய்திகள் அல்லைப்பிட்டிக் கொலை; சிறுவனின் உறவினர்கள் சடலத்துடன் வீதியில் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அல்லைப்பிட்டிக் கொலை; சிறுவனின் உறவினர்கள் சடலத்துடன் வீதியில் போராட்டம்!

Share
Share

யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் சடலத்துடன், உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதால் வட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில், 17 வயதான அல் பினோ அருள் பயாஸ் என்ற சிறுவன்

உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.

இதன்போது, சிறுவனைச் சுட்டுக்கொலை செய்த பொலிஸாரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சடலத்துடன் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடலத்தை அடக்கம் செய்வதற்காகச் சங்கரத்தை சந்தி ஊடாகக் கொண்டு சென்றபோது, அங்கு பெருமளவிலான வட்டுக்கோட்டை பொலிஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொலிஸாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த உறவினர்கள், ‘எங்களையும் சுடுங்கள், எங்கள் பிள்ளையை நாசமாக்கிவிட்டீர்களே’ எனக் கதறியழுதவாறு பொலிஸாரை நோக்கிச் சென்றனர்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பொலிஸார் மீது மண்ணை அள்ளிவீசியும், அவர்களைத் தள்ளிவிட்டும் உறவினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான முறுகல் நிலைஏற்பட்டது.

பின்னர், ஏனைய உறவினர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த மோதல் காரணமாக சங்கரத்தை சந்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சில மணிநேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குமாரபுரம் படுகொலை; நினைவேந்தல்!

திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது. திருகோணமலை – மூதூர் –...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹயஸ் ரக...

போதைப் பொருட்களுடன் ஒரே நாளில் 788 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின்...