யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் பயணித்த 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.15 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அந்தப் பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை மறித்து சோதனை இட முற்பட்டுள்ளனர்.
இதன் போது வாகனம் நிறுத்தாது வேகமாக பயணித்தபோதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை,
தம்மை மோதுவது போன்று வாகனம் வேகமாக செலுத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபரை பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment