Home தாயகச் செய்திகள் யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

Share
Share

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில்
இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகரை சேர்ந்த இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறிபணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டறிந்து ஆராய்ந்தபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை உரிமையாளரால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரான இளம் பெண்ணை கைது செய்தனர். அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப் பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை
செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருள்களை மீட்க விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...