Home தாயகச் செய்திகள் பரந்தன் – முல்லை விதியில் விபத்து! நால்வர் மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பரந்தன் – முல்லை விதியில் விபத்து! நால்வர் மரணம்!

Share
Share

பரந்தன் – முல்லை வீதியில் இன்று மாலை முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது, காரில் பயணித்த நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த பொன்னையா பூபாலன் (46 வயது) , சந்திரகுமார் சவேந்திரன் (வயது 34), புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன்(வயது 36) , அதே பகுதியைச் சேர்ந்த யுவானி பிரசாத் (வயது 34) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...