Home தென்னிலங்கைச் செய்திகள் இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால் அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளது. மின் விநியோக கொள்வனவு விலைமனுகோரலிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதியமைச்சர் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழு இன்றுவரை கூடவில்லை. நீதியமைச்சர் விருப்பத்துக்கு அமைவாகவே இவ்விடயத்தில் செயற்படுகிறார்.இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவுறுத்தியும் அவர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...