பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் நேற்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியது.
சடலத்தை அவதானித்த மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் ஆணுடையது என்றும் நீல நிறகாற்சட்டை, பழுப்பு நிற மேல் சட்டை அணிந்த நிலையில் காணப்பட்டது எனவும் சடலம் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment