Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி சேர்க்கிறது ஐ.நா!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி சேர்க்கிறது ஐ.நா!

Share
Share

ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கை யின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த 4 மாதங்களில் 3.53
கோடி அமெரிக்க டொலர்களை – சுமார் ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முயற்சி எடுத்துள்ளது என்று ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், ‘டித்வா’ புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமை பட்டியலைத் தயாரித்துள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கம் தலைமை தாங்குகிறது. ஐ. நா.
மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள்.

இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து,
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ. நா. ஏற்கனவே 95 இலட்சம் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 2.6 கோடி அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...