Home தாயகச் செய்திகள் யாழ்.பண்ணைக்கடலில் மூழ்கி இருவர் பலி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழ்.பண்ணைக்கடலில் மூழ்கி இருவர் பலி!

Share
Share

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...