Home தாயகச் செய்திகள் வவுனியாவில் 43 பேருக்கு எயிட்ஸ்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வவுனியாவில் 43 பேருக்கு எயிட்ஸ்!

Share
Share

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள்

2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும்.

எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது.

இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர்.

அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...