திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, திங்கட்கிழமை (01) நிலவரப்படி, மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.
மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment