Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

Share
Share

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவங்களில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை பாதிக்கும் சீரற்ற வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிட்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ, தல்தென பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று சரிந்தமையால் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 38 பாதுகாப்பு நிலையங்களில் (நிவாரண முகாம்கள்) 697 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் தற்போது தங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள், உணவு மற்றும் பிற நலன்புரி நடவடிக்கைகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாத்தஹேவாஹெட்ட பிரதேசத்தில் இருவரும் மற்றும் உடுதும்பர பகுதியில் மூவரும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...