Home தென்னிலங்கைச் செய்திகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணை அறிக்கை விரைவில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணை அறிக்கை விரைவில்!

Share
Share

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிறில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்ற நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாக அருட்தந்தை கூறினார்.

அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...