போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்
ளனர் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் கலட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் 20, 21, 22 வயதினர் என்றும் அவர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Leave a comment