Home தென்னிலங்கைச் செய்திகள் ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பு!

Share
Share

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.

19 அல்லது 20 ஆம் திகதிகளில் ஒருநாள் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரி தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏலவே கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், பின்னர் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை நேற்றைய தினம் பாதீட்டு வாக்கெடுப்பில் இருந்து தமிழரசுக் கட்சி விலகியிருந்தமை தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது அரசாங்கத்தை எதிர்ப்பது இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பாலங்கள் அமைத்து தருவதாக அரசாங்கம் கூறும் விடயங்களுக்காக ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களுக்கே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனவே அரசியல் தீர்வு குறித்ததான பேச்சுவார்த்தையை கருத்தில் கொண்டு நல்லிணக்க அடிப்படையில் வாக்கெடுப்பில் இருந்து விலகியதாக அவர் கூறினார்.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே தாம் அரசாங்கங்களுடன் இதுவரை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அந்த நம்பிக்கை சீர்குலைவதை அரசாங்கத்தின் செயற்பாடுகளே வெளிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...