Home தாயகச் செய்திகள் யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, தகரத்தினால் அமைத்த அவ்வீட்டினுள் இருந்த நெல்லை உண்பதற்காகச் சென்ற காட்டுயானையை கண்டு, அப்பெண் பயத்தில் வெளியே ஓடியபோது யானை தாக்கியுள்ளது.

இதன்போது, அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தாய் எனவும் 58 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டதன் பினனர், பிரேத பரிசோதனைக்காக, சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க மண்முனை மேற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...