Home தென்னிலங்கைச் செய்திகள் தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

Share
Share

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51 பொதிகளில் சுமார் 839 கிலோ போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்களில், 670 கிலோ 676 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ ஹேஷ் ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் மொத்தமாக 839 கிலோ 254 கிராம் எடை கொண்டது எனவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த போதைப்பொருட்கள் உணாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்றும் சந்தேகிக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

மூன்று படகுகள் ஊடாக நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படவுள்ளமை குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதற்பகுதியில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் பணியகம், தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடற் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதன்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

படகுகளின் இருப்பிடத்தை அடையாளம் காண்பதற்காக, அதில் நிறுவப்பட்ட VMS அமைப்பையும் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதனையடுத்து, விமானப்படையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த 3 படகுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில், நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், சந்தேகநபர்கள் அதனை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...