Home தாயகச் செய்திகள் யாழில் பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர் ரயில் மோதி மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞர் ரயில் மோதி மரணம்!

Share
Share

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் இளைஞன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார்..

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை , இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பித்து, ரயில் பாதையை கடந்து ஓட முற்பட்ட வேளை ரயிலில் மோதுண்டு மோதி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...